Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு 'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசம்

பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு 'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசம்

பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு 'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசம்

பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு 'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசம்

ADDED : செப் 21, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
தேனி:புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதல் காத்திருந்து 'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெறும். வேண்டுதல்கள் நிறைவேற பெருமாளை நினைத்து பக்தர்கள் புரட்டாசி விரதம் மேற்கொள்வார்கள்.

நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோவில், தேனி என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளித்தார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை தரிசனம் செய்தனர். கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

கம்பம்: கம்ப ராயப் பெருமாள் கோயிலில் காலை முதல் பெருமாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கூடி சாமி தரிசனம் செய்தனர். உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் சுதர்சன ஹோமம் நடந்தது. கலசத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள்பொடி, திருமஞ்சனம், தேன், சந்தனம் போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்து புனிதநீர் பெருமாளுக்கு சார்த்தப்பட்டது.அபிஷேக ஆராதனைகள் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

சின்னமனூர் லெட்சுமிநாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோம்பை ரெங்கநாத பெருமாள் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டனர். மலை மீதுள்ள கோயிலில் நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கம்பம் பகுதி பக்தர்கள் மற்றும் கேரளா சதுரங்காபாறை, ராமக்கல் மெட்டு பகுதியில் இருந்து வனப்பகுதிகள் வழியாக ஏராளமான பக்தர்கள் நடந்து வந்து பூஜைகளில் பங்கேற்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.

போடி: சீனிவாசப்பெருமாள் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் சீனிவாசப்பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சிறப்பு பூஜை, சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன.

போடி மேலச் சொக்கநாதபுரம் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

பெரியகுளம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் வாரம் சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு சுப்ரபாத சேவை நடந்தது. பால், தயிர், பன்னீர், சந்தனம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பட்டு ஆடைகள் உடுத்தி, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மூலவர் வரதராஜப்பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும், உற்ஸவர் மலர் அலங்காரத்தில் கருடசேவை வாகனத்தில் காட்சியளித்தனர்.

திருப்பாவை சேவித்தல், நட்சத்திர தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' நாமம் ஒலிக்க வரிசையில் காத்திருந்து சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார். பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை துளசி அலங்காரத்தில் காட்சியளித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் செய்திருந்தார்.

பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மூலவர் ஆஞ்சநேயர் வாழைப்பழம் அலங்காரத்தில் காட்சியளித்தார். வடகரை மேதகாரபடித்துறை ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us