/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய மார்ச் 28, 29 துணை முதல்வர் வருகை தேனியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய மார்ச் 28, 29 துணை முதல்வர் வருகை
தேனியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய மார்ச் 28, 29 துணை முதல்வர் வருகை
தேனியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய மார்ச் 28, 29 துணை முதல்வர் வருகை
தேனியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய மார்ச் 28, 29 துணை முதல்வர் வருகை
ADDED : மார் 26, 2025 01:57 AM
தேனி:தேனி மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய துணை முதல்வர் உதயநிதி மார்ச் 28, 29 ல் வரவுள்ளார்.
இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி பணிகளை 2023 நவ.,ல் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக மார்ச் 28, 29 ல் அவர் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தலைமை செயலக அதிகாரிகள் தகவல் அனுப்பினர். இதனை தொடர்ந்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் மார்ச் 24ல் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் பங்கேற்றனர்.
துணை முதல்வர் ஆய்வின் போது திட்ட பணிகளின் முன்னேற்றம், பதிவேடுகளை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கவுள்ளார். அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளின் நிலை குறித்து பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சட்டசபை கூட்டம் நடந்து வருவதால் துணைமுதல்வர் மார்ச் 28, 29 தேனி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.