தேனி : தேனி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன், தேவேந்திர குல வேளாளர் சமூக ஒருங்கிணைப்புக்குழு சார்பில், ‛தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர்கள் மீது திட்டமிட்டு நடந்துவரும் படுகொலைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தே.கு.வே., மக்கள் சபை தலைவர் ராமர் பாண்டியன் படுகொலைக்கு நீதி வழங்கிட வேண்டும். குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயாலளர் கருப்பசாமி தலைமை வகித்தார், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.