கூடலுார் : கூடலுாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் கர்ணன் தலைமையில் நடந்தது.
துணைச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடராக அறிவிக்கவும், மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் பெருமாள், துணை செயலாளர் பரமேஸ்வரன், ராமர், பேயத்தேவன், அசோகன், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


