Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ அரசு மருத்துவமனைகளில் தொற்றா நோய் கிளினிக் அமைக்க முடிவு

அரசு மருத்துவமனைகளில் தொற்றா நோய் கிளினிக் அமைக்க முடிவு

அரசு மருத்துவமனைகளில் தொற்றா நோய் கிளினிக் அமைக்க முடிவு

அரசு மருத்துவமனைகளில் தொற்றா நோய் கிளினிக் அமைக்க முடிவு

ADDED : ஜன 08, 2025 05:36 AM


Google News
கம்பம் : தொற்றா நோய்களை கண்டறிந்து சிகிச்சையளிக்க ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் பிரத்யேக கிளினிக் ஒன்றை அமைக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீரிழிவு, ரத்த அழுத்த நோய் மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. எந்த நோய்க்கு சிகிச்சைக்கு சென்றாலும், முதலில் இந்த இரண்டு நோய்கள் உள்ளதா என்பதை பரிசோதித்த பின்பே சிகிச்சையை துவக்குகின்றனர்.

இந் நோய்களை பொதுமக்களிடம் கண்டறிந்து சிகிச்சையளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதில் ஒன்றாக மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பே என்.சி.டி. எனும் தொற்றா நோய் பிரிவு துவக்கப்பட்டது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இப் பிரிவில் 2 நர்சுகள் நியமிக்கப்பட்டு, அனைவரும் பரிசோதித்து நீரிழிவு, ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு, பாதிப்பு இருந்தால் அதற்கான சிகிச்சையும் தரப்பட்டது. தொடர் பரிசோதனையும் செய்யப்பட்டது.

ஆனால் 2019 முதல் 2021 க்குள் இந்தியா முழுவதும் நடத்திய சர்வே மூலம் 3 கோடி பேர் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தற்போது அதிகரித்து வரும் இந் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த, என்.சி.டி. பிரிவை பலப்படுத்த மாநில மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் என்.சி.டி. கிளினிக் ஏற்படுத்தவும், ஒவ்வொரு கிளினிக்கில் ஒரு டாக்டர், கூடுதல் நர்சுகள், சிறப்பு ஆய்வகம், குறிப்பிட்ட எண்ணிக்கையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும். நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகள் பற்றிய புள்ளி விபரங்கள் திரட்டி அதற்கேற்றபடி நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us