/உள்ளூர் செய்திகள்/தேனி/ ேபாட்டித் தேர்வர்கள் பயன்படுத்த கூடுதல் கம்ப்யூட்டர் வாங்க முடிவு ேபாட்டித் தேர்வர்கள் பயன்படுத்த கூடுதல் கம்ப்யூட்டர் வாங்க முடிவு
ேபாட்டித் தேர்வர்கள் பயன்படுத்த கூடுதல் கம்ப்யூட்டர் வாங்க முடிவு
ேபாட்டித் தேர்வர்கள் பயன்படுத்த கூடுதல் கம்ப்யூட்டர் வாங்க முடிவு
ேபாட்டித் தேர்வர்கள் பயன்படுத்த கூடுதல் கம்ப்யூட்டர் வாங்க முடிவு
ADDED : செப் 03, 2025 09:21 AM
தேனி; போட்டி தேர்விற்கு தயாராகுபவர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் தேனி அறிவுசார் மையத்திற்கு புதிதாக 8 கம்ப்யூட்டர்கள் வாங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி அறிவுசார் மையம் கர்னல் ஜான் பென்னிகுவிக்கு பஸ் ஸ்டாண்டில் செயல்படுகிறது. இங்கு மத்திய, மாநில அரசு பணிக்கான தேர்வுகள், வங்கி தேர்விற்கு தயாராகும் நுாற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் தினமும் வந்து படிக்கின்றனர்.
நுாலகம் பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ளதால் பஸ் வசதி உள்ளதால் பெரியகுளம், தேவாரம், போடி, சின்னமனுார், ஆண்டிபட்டி உள்ளிட்டபகுதிகளில் இருந்து பெண் தேர்வர்களும் அதிகம் வந்து செல்கின்றனர். இங்கு படித்த சுமார் 30 பேர் கடந்த ஆண்டு அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு தொடர்பான ஏராளமான புத்தகங்கள், பள்ளி பாட புத்தகங்கள் உள்ளன.
இதனால் மாவட்ட நுாலம், வேலைவாய்ப்பு மையத்தை விட அதிகமானோர் இந்த மையத்தை பயன்படுத்துகின்றனர். நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த மையத்தில் தற்போது இணைய வசதியுடன் இரு கம்ப்யூட்டர்கள் உள்ளன. ஒருசிலர் மட்டும் பயன்படுத்துகின்றனர்.
அனைத்து தேர்வகளும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புதிதாக 8 கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட உள்ளது,' என்றனர்.