ADDED : மே 28, 2025 02:09 AM
போடி:தமிழகம்- கேரளாவை இணைக்கும் போடிமெட்டு மலைப்பாதையில் கன மழையுடன் சூறாவளி வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
மூணாறு செல்லும் வழித்தடமான தேனிமாவட்டம் போடி முந்தல் ரோட்டில் இருந்து 22 கி.மீ., துாரத்தில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் போடிமெட்டு மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 4644 அடி உயரத்தில் உள்ளது.தென்மேற்கு பருவமழையால் இங்கு கடந்த 4 நாட்களாக கன மழையுடன் சூறாவளியும் வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இங்கு 5 வது வளைவு பகுதியில் உள்ள காற்றாடி பாறை அருகே சூறாவளி ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் சிலர் நின்று அலைபேசியில் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.