/உள்ளூர் செய்திகள்/தேனி/ பயிர்சேதம் கணக்கிடும் பணிகள் பாதிப்பு: அறிக்கை இன்று சமர்ப்பிக்க உத்தரவு பயிர்சேதம் கணக்கிடும் பணிகள் பாதிப்பு: அறிக்கை இன்று சமர்ப்பிக்க உத்தரவு
பயிர்சேதம் கணக்கிடும் பணிகள் பாதிப்பு: அறிக்கை இன்று சமர்ப்பிக்க உத்தரவு
பயிர்சேதம் கணக்கிடும் பணிகள் பாதிப்பு: அறிக்கை இன்று சமர்ப்பிக்க உத்தரவு
பயிர்சேதம் கணக்கிடும் பணிகள் பாதிப்பு: அறிக்கை இன்று சமர்ப்பிக்க உத்தரவு
ADDED : அக் 22, 2025 01:04 AM
தேனி: மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்வதால் பயிர்சேதம் கணக்கிடும் பணி பாதித்துள்ளது. பயிர் சேதம் அறிக்கை இன்று தாக்கல் செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தர விட்டுள்ளார்.
மாவட்டத்தில் அக்., 17,18 ல் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் குடியிருப்பு பகுதிகள், வயல்வெளிகளை மூழ்கடித்து சென்றது.
இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. இதனால் நெல், பீட்ரூட், முட்டைகோஸ், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் வடிந்தால் நிலைமை சீராகும் என விவசாயிகளும் அதிகாரிகளும் நம்பி வந்தனர்.
ஆனால் மூன்று நாட்கள் ஆன போதும் சில இடங்களில் வெள்ள நீர் வடியவில்லை. இதனால் நெல்பயிர் அதிக அளவில் சேதமடைந்துள்ளது.
இதுபற்றி வேளாண் துறையினர கூறுகையில், 'பயிர் சேத பாதிப்புகளை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பணிகளை விரைவு படுத்தி உள்ளோம். வேளாண், தோட்டக்கலைத்துறையினருடன் வருவாய்த்துறையினருடன் இணைந்து கணக்கெடுப்பு மேற்கொண்டுள்ளோம்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளது. சில இடங்களில் வயல்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. வெளியூரை சேர்ந்த அலுவலர்கள் பலரும் விடுமுறையின்றி வெள்ள சேத கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.


