ADDED : ஜூன் 10, 2025 02:06 AM
சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ் -மீனாட்சி தம்பதியினர். நேற்று முன்தினம் சீலையம்பட்டி முல்லைப்பெரியாறு அணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
திடீரென சுழலில் சிக்கி ஆற்றில் இழுத்து செல்லப்பட்டனர். சிறிது தூரத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் ஆற்றின் நடுவில் இருந்த பாறையில் ஏறி நின்று மீட்க கோரி குரல் எழுப்பினர். தகவலின்பேரில் சின்னமனூர் தீயணைப்பு துறையினர் இருவரையும் மீட்டனர்.