/உள்ளூர் செய்திகள்/தேனி/ மூடு விழா விலைச்சரிவால் இலவம் பஞ்சு தொழிற்சாலைகள் ஜி.எஸ்.டி.,யை நீக்கி,விலை நிர்ணயிக்க வலியுறுத்ல் மூடு விழா விலைச்சரிவால் இலவம் பஞ்சு தொழிற்சாலைகள் ஜி.எஸ்.டி.,யை நீக்கி,விலை நிர்ணயிக்க வலியுறுத்ல்
மூடு விழா விலைச்சரிவால் இலவம் பஞ்சு தொழிற்சாலைகள் ஜி.எஸ்.டி.,யை நீக்கி,விலை நிர்ணயிக்க வலியுறுத்ல்
மூடு விழா விலைச்சரிவால் இலவம் பஞ்சு தொழிற்சாலைகள் ஜி.எஸ்.டி.,யை நீக்கி,விலை நிர்ணயிக்க வலியுறுத்ல்
மூடு விழா விலைச்சரிவால் இலவம் பஞ்சு தொழிற்சாலைகள் ஜி.எஸ்.டி.,யை நீக்கி,விலை நிர்ணயிக்க வலியுறுத்ல்
ADDED : செப் 21, 2025 05:24 AM

போடி: தேனி மாவட்டத்தில் விலைசரிவால் இலவம் பஞ்சு தொழிற்சாலைகள் மூடுவிழாவை நோக்கி உள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் இலவம் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே இலவம் பஞ்சிற்கு ஜி.எஸ்.டி., நீக்கி குறைந்த பட்ச விலையை அரசு நிர்ணயம் செய்திட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் போடி, குரங்கணி, வருஷநாடு உள்ளிட்ட பகுதியில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இலவம் சாகுபடியாகிறது. ஏப்., மே, ஜூன் மாதம் இலவங்காய் சீசனாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலவம் காயில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட விதை பஞ்சு கிலோ ரூ.70 ஆகவும், சில்லரையில் ரூ. 65 ஆக இருந்தது. அரைத்த சுத்தமான பஞ்சு கிலோ ரூ 270 வரை இருந்தது. கடந்த ஆண்டு விதை பஞ்சு கிலோ ரூ. 70 வரையும், சுத்தமான பஞ்சு கிலோ ரூ.170 ஆக இருந்தது.
இந்த ஆண்டு துவக்கத்தில் விலை மேலும் குறைந்து விதை பஞ்சு கிலோ ரூ.55 வரையும், சில்லரையில் ரூ. 50 ஆகவும், அரைத்த சுத்தமான பஞ்சு ரூ.150க்கு விற்றது. தற்போது விதை பஞ்சு கிலோ ரூ. 40 ஆகவும், சுத்தமான பஞ்ச ரூ.140 ஆக விலை குறைந்து உள்ளது. விளைச்சல் இருந்தும் உரிய விலை இன்றி பலர் காய்களை பறிக்காமல் விட்டனர்.
மரங்கள் வெட்டி அகற்றம்: விவசாயிகள் கூறியதாவது: இலவம் பஞ்சிற்கு விலை இல்லாததால் காய் பறிப்பு, உடைப்பு, பஞ்சு பிரித்தெடுப்பு கூலி கூட கொடுக்க முடியவில்லை. இதனால் காய் பறிக்காததால் வெடித்து வீணானது. தோட்டம் குத்தகைக்கு எடுத்தவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களுக்கு வேலை இழந்துள்ளனர். இதனால் விவசாயிகள் சிலர் இலவமரங்களை வெட்டி வேறு விவசாயத்திற்கு மாற துவங்கி உள்ளனர்.
ராணுவம், கதவர் பவன்களுக்கு கொள்ளுதல் செய்யுங்கள் முத்துராமலிங்கம், செயலாளர், இலவம் பஞ்சு உற்பத்தியாளர்கள் சங்கம், போடி : மாநில அளவில் இங்கு இலவம் பஞ்சு மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. கலப்படம் இன்றி தயாரிக்கப்படும் மெத்தை, தலையணை தமிழக, கேரளா கதர் பவன்கள், ராணுவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்தோனேசியாவில் இருந்து தரமற்ற, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிரேடு 2 பஞ்சு இறக்குமதியாகின்றன. தென்னை நார், நுரை மெத்தையால் உடல் பாதிக்கும். ஆனால் விலை குறைவால் மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஜி.எஸ்.டி.,க்கு முன்பு 2சதவீதம் வரி மட்டுமே இருந்தது. தற்போது 18 சதவீத வரியால் மெத்தை, தலையணை விற்பனை குறைந்தது. 15 ஆண்டுகளாக இந்திய ராணுவம், கதர் பவன்களுக்கு இங்கிருந்து மெத்தை, தலையணை கொள்முதல் செய்திட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். நல்ல விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் தொழிற்சாலைகள் மூடு விழாவை நோக்கி உள்ளன.
இலவம் பஞ்சு மெத்தை தயாரிப்பை ஊக்கப்படுத்திட ஜி.எஸ்.டி.,நீக்குவதோடு, இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். ராணுவம், கதர் பவன்களுக்கு மெத்தை தலையணைகளை கொள்முதல் செய்திட வேண்டும் என்றார்.