ADDED : மே 30, 2025 03:29 AM
தேனி: தேனி வேளாண் விற்பனை கூடத்தில் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.213க்கு விற்பனையானது.
தேனி சுக்குவாடன்பட்டியில் ஒழுங்குமுறை கூடத்திற்கு நேற்று முன்தினம் நடந்த ஏலத்திற்கு 930.50 கிலோ கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. முதல் ரக கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.213க்கு விற்பனையானது. குறைந்தபட்சமாக கிலோ ரூ.170க்கு விற்பனையானது. கொப்பரைகள் கிலோ ரூ. 1.86 லட்சத்திற்கு விற்பனையானது.மக்காச்சோளம் 6.3 மெட்ரிக் டன் விற்பனைக்கு வந்தது. கிலோ ரூ. 24.92 என்ற வீதத்தில் ரூ. 1.57 லட்சத்திற்கு விற்பனையானது. ஏலத்தில் 5விவசாயிகள், 21 விவசாயிகள் இ நாம் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய சுக்குவாடன்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நேரடியாக அணுகலாம். அல்லது 99766 30746 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.