ADDED : ஜூன் 13, 2025 03:14 AM
தேனி: மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் உள்ள குறைகள் புகார்கள் தெரிவிக்க நுகர்வோர் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாம் தாலுகா வாரியாக துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் முன்னிலையில் நாளை( ஜூன் 14) நடக்கிறது என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். முகாமில் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல்,நீக்கம், முகவரி, கடை மாற்றம் தொடர்பாக மனு அளிக்கலாம்.
பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் தலைமையில் சிந்துவம்பட்டி ரேஷன்கடை, தேனியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்சிவபாலன் முன்னிலையில் கோவிந்த நகரம் மகளிர் கட்டடம், ஆண்டிபட்டியில் கலால் உதவி ஆணையர் முத்துசெல்வி தலைமையில் கரட்டுப்பட்டி ரேஷன்கடை, உத்தமபாளையத்தில் ஆர்.டி.ஓ., சையது முகமது தலைமையில் சுருளிபட்டி மங்கை மகளிர் ரேஷன் கடை, போடியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி தலைமையில் போடேந்திரபுரம் ரேஷன்கடையில் முகாம்கள் நடக்கிறது.