ADDED : மே 30, 2025 03:25 AM
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்து, அனைவரும் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும். அரசு பொதுத்தேர்வில் தவறிய மாணவர்களை துணைத்தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். சி.இ.ஓ., இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.