/உள்ளூர் செய்திகள்/தேனி/ டூவீலர் பேரிகார்டில் மோதி கல்லுாரி மாணவர் பலி டூவீலர் பேரிகார்டில் மோதி கல்லுாரி மாணவர் பலி
டூவீலர் பேரிகார்டில் மோதி கல்லுாரி மாணவர் பலி
டூவீலர் பேரிகார்டில் மோதி கல்லுாரி மாணவர் பலி
டூவீலர் பேரிகார்டில் மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : செப் 16, 2025 04:55 AM
உத்தமபாளையம்: போடி சி.பி.ஏ., கல்லூரி மாணவர் ராகுல் குமார் டூவீலரில் வந்தபோது க. புதுப்பட்டியில் பேரிகார்டில் மோதி பலியானர்.
போடி குப்பிநாயக்கன்பட்டி மாணிக்க வாசகர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் 48, இவரது மகன் ராகுல் குமார். போடி சி.பி.ஏ. கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். செப். 13 ல் கம்பத்தில் உள்ள தனது மாமாவை பார்க்க டூவீலரில் போடியில் இருந்து கம்பம் வந்துள்ளார். கோம்பை ரோடு ஊத்துக்காடு பிரிவில் இரவு 7:20 மணிக்கு இருட்டு காரணமாக ரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு தெரியாததால், அதன் மீது மோதி பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சில் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிசிச்சை பலனின்றி இறந்தார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.