/உள்ளூர் செய்திகள்/தேனி/ காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : செப் 12, 2025 04:42 AM
தேனி: மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது. மருத்துவ இணை இயக்குநர் கலைசித்ரா, மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி கமிஷனர்கள், பள்ளி கல்வித்துறையினர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்டத்தில் பருவமழை துவங்கும் முன் காய்ச்சல்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும்.
உள்ளாட்சி நிர்வாகங்கள் மழைநீர் எங்கும் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அரசு மருத்துவமனைகள் மட்டும் இன்றி, தனியார் மருத்துவமனைகளில் பதிவாகும் காய்ச்சல் நோயாளிகள் பற்றி பதிவுகளை சரிபார்க்க வேண்டும்.ஏதேனும் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர்அறிவுறுத்தினார்.