Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பூச்சிகளை கட்டுப்படுத்த  ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு  முறைகளை பின்பற்ற வேண்டும்  விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

பூச்சிகளை கட்டுப்படுத்த  ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு  முறைகளை பின்பற்ற வேண்டும்  விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

பூச்சிகளை கட்டுப்படுத்த  ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு  முறைகளை பின்பற்ற வேண்டும்  விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

பூச்சிகளை கட்டுப்படுத்த  ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு  முறைகளை பின்பற்ற வேண்டும்  விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

ADDED : செப் 08, 2025 07:03 AM


Google News
தேனி : ''பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சி மருந்துகள் பயன்பாட்டை குறைத்து ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.'' என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தி உள்ளார்.

மாவட்டத்தில் கத்தரி, அவரை, தக்காளி, மா என தோட்டக்கலை பயிர்கள் சுமார் 19 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி ஆகிறது.

இப்பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்ற பூச்சி கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கும் போது உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அவை உணவுப் பொருட்களில் கலப்பதால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது.

விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான பூச்சிகளின் வளர்ச்சி, பரவலை கண்காணித்தல், ஒட்டுண்ணிகள் மூலம் அழித்தல், பயிர் சுழற்சி, பூச்சிப் பொறிகள், பூச்சி எதிர்ப்பு பயிர்களை நடவு செய்ய வேண்டும்.

தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பூச்சி நோய் மேலாண்மையை ஊக்குவிக்க ஒரு எக்டேருக்கு ரூ.1500 மதிப்பிலான உயிர் உரங்கள், தென்னையை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ரூ.1775 மதிப்பிலான 10 மஞ்சள் ஒட்டுப் பொறிகள், ஒரு ஒட்டுண்ணிப் பூச்சி முட்டை தொகுப்பு வழங்கப் படுகின்றன.

ஒரு விவசாயி அதிகபட்சம் 2 எக்டேருக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us