/உள்ளூர் செய்திகள்/தேனி/ சீதோஷ்ண நிலை மாற்றம்; ஆடுகளுக்கு சளி தொந்தரவு சீதோஷ்ண நிலை மாற்றம்; ஆடுகளுக்கு சளி தொந்தரவு
சீதோஷ்ண நிலை மாற்றம்; ஆடுகளுக்கு சளி தொந்தரவு
சீதோஷ்ண நிலை மாற்றம்; ஆடுகளுக்கு சளி தொந்தரவு
சீதோஷ்ண நிலை மாற்றம்; ஆடுகளுக்கு சளி தொந்தரவு
ADDED : ஜூலை 02, 2025 08:01 AM
கம்பம்; சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளுக்கு சளி பிடித்து வருகிறது. இதனால் இரவு முழுவதும் செருமிக் கொண்டே இருக்கும்.
மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளுக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. சளி பிடித்து இரவு முழுவதும் கொட்டகையில் செருமிக் கொண்டே உள்ளது.
இந்த ஆடுகளுக்கு கம்பம் கால்நடை மருந்தகத்தில் ஆன்டி பயாடிக் மருந்துகள் மற்றும் பி காம்ப்ளக்ஸ் சிரப்புகள் வழங்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு இந்த மருந்துகளை கொடுத்தால் ஆடுகள் குணமாகி விடும் என்று கால்நடை டாக்டர் செல்வம் கூறியுள்ளார். இந்த சளி பெரும்பாலும் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளுக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறியுள்ளார்.