Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 

ADDED : மே 23, 2025 04:39 AM


Google News
தேனி: மாவட்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில், தேனி எஸ்.பி., அலுவலகத்தில் பயிற்சி பட்டறை நடந்தது.

எஸ்.பி., சிவபிரசாத் தலைமை வகித்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் ஏ.டி.எஸ்.பி., கலைகதிரவன், ஊர்க்காவல்படை திண்டுக்கல் சரக உதவி தளபதி அஜய்கார்த்திக்ராஜா, நலம் பல்நோக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சி.பி.ராஜ்குமார், ஆண்டிபட்டி வனத்துறை ரேஞ்சர் அருள்குமார், தேனி மாவட்ட முதல்வரின் பசுமைத் தோழர் பிரியங்கா ஆகியோர் காலநிலை மாற்றம் குறித்தும், வனங்கள், வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம். அதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்ட, நினைவு பரிசாக பூச்செடிகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சள் பை, நோட்புக், பேனா, சிறுதானிய உணவு பண்டங்கள், காய்கறி சூப், மதிய உணவு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us