/உள்ளூர் செய்திகள்/தேனி/சிறுவர்கள் டூவீலர்களை ஓட்டுவது அதிகரிப்பு ; பெற்றோருக்கு அபராதம் விதிப்பை பின்பற்றாத நிலைசிறுவர்கள் டூவீலர்களை ஓட்டுவது அதிகரிப்பு ; பெற்றோருக்கு அபராதம் விதிப்பை பின்பற்றாத நிலை
சிறுவர்கள் டூவீலர்களை ஓட்டுவது அதிகரிப்பு ; பெற்றோருக்கு அபராதம் விதிப்பை பின்பற்றாத நிலை
சிறுவர்கள் டூவீலர்களை ஓட்டுவது அதிகரிப்பு ; பெற்றோருக்கு அபராதம் விதிப்பை பின்பற்றாத நிலை
சிறுவர்கள் டூவீலர்களை ஓட்டுவது அதிகரிப்பு ; பெற்றோருக்கு அபராதம் விதிப்பை பின்பற்றாத நிலை
UPDATED : ஜூலை 02, 2025 09:44 AM
ADDED : ஜூலை 02, 2025 06:27 AM

டூவீலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விபத்துக்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. சாலை விதிகளை மீறுவதால் விபத்துக்கள் அரங்கேறி பல உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. சாலை விதிகளை மீறும் 25 வகையானவற்றிற்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
போலீசாரைக் கண்டதும் வேகமாக செல்வதால் விபத்துகள் மேலும் அதிகரிப்பதாக கிடைத்த தகவலால் 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் விதிக்க காவல்துறை அறிவித்துள்ளது. அதிவேகமாக ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது, நோ என்ட்ரியில் செல்வது, மது போதையில் வாகனம் ஓட்டுவது, இரண்டு பேருக்கு மேல் வாகனத்தில் செல்வது ஆகிய ஐந்து காரணங்களுக்கு மட்டும் அபராதம் விதிக்க கூறிய காவல்துறை, சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவதை தடுக்க கடுமையாக்கவில்லை. சிறுவர்கள் டூவீலர் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு அபராதம் விதிப்பதாக அறிவித்த போதிலும் முழுமையாக பின்பற்றாததால் மாவட்டத்தில் சிறுவர்கள் டூவீலர்களை ஓட்டுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.
கஜேந்திரன், கூடலுார் மக்கள் மன்ற செயலாளர்:விபத்துககளை தடுப்பதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம். போலீசாருக்கு பயந்து ஹெல்மெட் அணிகின்றனர். பலர் லைசன்ஸ் இன்றி டூவீலரை ஓட்டுகின்றனர். சிறுவர்கள் டூவீலர்களை அதிவேகமாக ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பெற்றோர்களும் சிறுவர்களுக்கு டூவீலரை கொடுக்காமல் இருக்க வேண்டும்.