/உள்ளூர் செய்திகள்/தேனி/ மருத்துவமனையில் நோயாளிகளிடம் அலைபேசி திருட்டு மருத்துவமனையில் நோயாளிகளிடம் அலைபேசி திருட்டு
மருத்துவமனையில் நோயாளிகளிடம் அலைபேசி திருட்டு
மருத்துவமனையில் நோயாளிகளிடம் அலைபேசி திருட்டு
மருத்துவமனையில் நோயாளிகளிடம் அலைபேசி திருட்டு
ADDED : ஜூன் 04, 2025 01:16 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி இந்திராநகரைச் சேர்ந்தவர் பரமசிவம் 42.
மாவட்ட அரசு மருத்துவமனையில் தலை காயத்திற்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
தலையணைக்கு அடியில் அலைபேசியை வைத்துள்ளார். மர்மநபர்கள் அலைபேசியை திருடி சென்றனர்.
தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர். மாவட்ட அரசுமருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் அவருக்கு உதவிக்கு வருவோர் அசந்து தூங்குபவர்களிடம் அலைபேசி திருட்டு அதிகரித்து வருகிறது.
மருத்துவமனை நுழைவு வாயிலில் புறக்காவல் நிலையம் போலீசார் இருந்தும் திருட்டு தொடர்கிறது. மருத்துவமனையில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரியும் நபர்களை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-