/உள்ளூர் செய்திகள்/தேனி/ வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.13.24 லட்சம் மோசடி: கணவன் -, மனைவி உட்பட மூவர் மீது வழக்கு வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.13.24 லட்சம் மோசடி: கணவன் -, மனைவி உட்பட மூவர் மீது வழக்கு
வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.13.24 லட்சம் மோசடி: கணவன் -, மனைவி உட்பட மூவர் மீது வழக்கு
வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.13.24 லட்சம் மோசடி: கணவன் -, மனைவி உட்பட மூவர் மீது வழக்கு
வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.13.24 லட்சம் மோசடி: கணவன் -, மனைவி உட்பட மூவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 30, 2025 11:52 PM
தேனி:
தேனி மாவட்டம் தேவாரம் அருகே டி.சிந்தலைச்சேரியைச் சேர்ந்த உபரி அந்தோணியிடம் மகளுக்கு வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.13.24 லட்சம் மோசடி செய்த அதே பகுதி ரஞ்சித்குமார், மனைவி வசந்தகுமாரி, உறவினர் தினேஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
டி.சிந்தலைச்சேரியில் பழக்கடை நடத்தும் உபரி அந்தோணி மகள் எம்.எஸ்சி.,முடித்து அரசு பணிக்காக முயற்சி செய்தார். பழக்கடைக்கு வந்த ஆக்டிங் டிரைவர் ரஞ்சித்குமார், உபரி அந்தோணியிடம் 'உயரதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலம் மகளுக்கு வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாக' கூறினார். பின் பணி ஆணை நகலை காண்பித்து 2024 ஜூனில் ரூ.6 லட்சம் பெற்றார். மீதம் ரூ.7 லட்சம் கொடுத்தால் பணி ஆணை வழங்குகிறேன் என்றார்.
அதை நம்பி 2024 ஜூன் 21ல் ரஞ்சித்குமார் வங்கிக் கணக்கிற்கு ரூ.6.60 லட்சம் செலுத்தினார். பின் ரஞ்சித்குமார் மனைவி, வசந்தகுமாரி வங்கிக்கணக்கில் ரூ.64 ஆயிரம் செலுத்தினார். ரஞ்சித்குமாரின் உறவினர் தினேஷ்குமார் அலைபேசியில் உபரி அந்தோணியிடம் தன்னை வனத்துறை அதிகாரி என அறிமுகம் செய்து விரைவில் பணி ஆணைகிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். ரூ.13.24 லட்சம் பெற்ற மூவரும் இணைந்து மோசடி செய்தனர். பின் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உபரி அந்தோணி, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். ரஞ்சித்குமார், மனைவி வசந்தகுமாரி, தினேஷ்குமார் மீது எஸ்.ஐ., மணிமாறன் வழக்குப்பதிவு செய்தார். இவர்கள் மேலும் 5 பேரிடம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.