பெண்ணிடம் தகராறு 5 பேர் மீது வழக்கு
பெண்ணிடம் தகராறு 5 பேர் மீது வழக்கு
பெண்ணிடம் தகராறு 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 24, 2025 03:29 AM
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் வரதராஜ் நகர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மனைவி உமாராணி 35. கணவருடன் கருத்து வேறுபாட்டினால் பெற்றோருடன், மகன் சந்தோசுடன் வசித்து ஆடுகள் மேய்த்து வருகிறார்.
அதே பகுதி தனியார் மில் பணியாளர் கெப்பணன், எங்கள் பகுதிக்குள் ஆடுகள் மேய்க்க கூடாது என உமாராணியை அவதூறாக பேசி, சந்தோஷ் மற்றும் இருஆடுகளை அடித்துள்ளார். இதில் சில நாட்களில் ஆடுகள் உடல்நலமின்றி இறந்தது. இதனை கேட்ட உமாராணி தந்தை தாக்கப்பட்டார். ஜெயமங்கலம் போலீசார் கெப்பணன் இவருக்கு ஆதரவாக செயல்பட்ட பிச்சைமணி, முத்துச்சாமி, பாண்டி, பெருமாள் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.