/உள்ளூர் செய்திகள்/தேனி/பென்னிகுவிக் மணிமண்டபம் முழுமையாக சீரமைக்க வலியுறுத்தல்பென்னிகுவிக் மணிமண்டபம் முழுமையாக சீரமைக்க வலியுறுத்தல்
பென்னிகுவிக் மணிமண்டபம் முழுமையாக சீரமைக்க வலியுறுத்தல்
பென்னிகுவிக் மணிமண்டபம் முழுமையாக சீரமைக்க வலியுறுத்தல்
பென்னிகுவிக் மணிமண்டபம் முழுமையாக சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 07, 2024 07:14 AM

கூடலுார்: லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணி மண்டபத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கிற்கு லோயர்கேம்பில் மணி மண்டபம் கட்டப்பட்டு 2013ல் பயன்பாட்டிற்கு வந்தது. பென்னிகுவிக்கின் பிறந்த நாளான ஜன.15 பொங்கல் விழாவாக விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பென்னிகுவிக் மணிமண்டபம் சீரமைக்கப்பட்டு வர்ண விளக்குகளால் ஜொலிக்கும்.
விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மணிமண்டபம் முழுமையாக சீரமைப்பதில்லை.
பெயரளவில் முட்புதர்களை அகற்றிவிட்டு காம்பவுண்ட் சுவருக்கு மட்டும் வர்ணம் பூசி வர்ண விலங்குகளால் அலங்கரித்து விடுகின்றனர்.
விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் முழுமையாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொடியரசன், முல்லைச் சாரல் விவசாய சங்க தலைவர், கூடலுார்: ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக அரசு நிதி ஒதுக்குகிறது. இதை நீர்வளத்துறை அதிகாரிகள் முறையாக பயன்படுத்துவதில்லை.
தென் தமிழக விவசாயிகளின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக்கின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாட அரசு முன்வர வேண்டும்.
மணிமண்டபம் முழுவதும் வர்ணம் பூசி சீரமைக்க வேண்டும்.