ADDED : மே 22, 2025 04:38 AM
தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி உசையப்பா தெருவைச் சேர்ந்தவர் முருகன் 40. தேவதானப்பட்டி வைகை அணை பைபாஸ் ரோட்டில் சொட்டு நீர் குழாய் கடை வைத்துள்ளார்.
இவரும் இவரது மனைவியும் காலை 9:00 மணிக்கு கடைக்கு வந்து, மாலை 6:00 மணிக்கு வீடு திரும்புவர்.
மர்மநபர்கள் இவரது வீட்டில் பீரோவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 3 பவுன் தங்க நெக்லஸ், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தங்க தோடினை திருடி சென்றனர். தேவதானப்பட்டி போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.