/உள்ளூர் செய்திகள்/தேனி/ அக்கா இறப்பிற்கு வந்த தம்பி குளத்தில் மூழ்கி பலி அக்கா இறப்பிற்கு வந்த தம்பி குளத்தில் மூழ்கி பலி
அக்கா இறப்பிற்கு வந்த தம்பி குளத்தில் மூழ்கி பலி
அக்கா இறப்பிற்கு வந்த தம்பி குளத்தில் மூழ்கி பலி
அக்கா இறப்பிற்கு வந்த தம்பி குளத்தில் மூழ்கி பலி
ADDED : மே 13, 2025 04:22 AM
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அக்கா விஜயலட்சுமி இறப்புக்கு வந்த தம்பி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் 46, குளத்தில் மூழ்கி பலியானார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் . பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி தொழிலாளி. இவரது சகோதரி விஜயலட்சுமி வத்திராயிருப்பில் வசித்து வந்தார். உடல்நிலை சரியில்லாமல் மே 10ல் இறந்தார். அந்த இறப்பிற்காக தனது தந்தை ஜெயராம் 75, மனைவி சுந்தரவல்லி , குழந்தைகள் உறவினர்களுடன் வத்திராயிருப்பிற்கு வெங்கடேஸ்வரன் வந்தார்.
நேற்று மதியம் 12:00 மணிக்கு சடங்குகளை கழித்து விட்டு தம்பிபட்டி மாவூத்து கோயில் குளத்தில் குளிக்கும்போது வெங்கடேஸ்வரன் தண்ணீரில் மூழ்கி பலியானார்.


