/உள்ளூர் செய்திகள்/தேனி/ சாலிமரத்துபட்டிக்கு ரூ.1.52 கோடி செலவில் பாலம், ரோடு பணி துவக்கம் தினமலர் செய்தி எதிரொலி சாலிமரத்துபட்டிக்கு ரூ.1.52 கோடி செலவில் பாலம், ரோடு பணி துவக்கம் தினமலர் செய்தி எதிரொலி
சாலிமரத்துபட்டிக்கு ரூ.1.52 கோடி செலவில் பாலம், ரோடு பணி துவக்கம் தினமலர் செய்தி எதிரொலி
சாலிமரத்துபட்டிக்கு ரூ.1.52 கோடி செலவில் பாலம், ரோடு பணி துவக்கம் தினமலர் செய்தி எதிரொலி
சாலிமரத்துபட்டிக்கு ரூ.1.52 கோடி செலவில் பாலம், ரோடு பணி துவக்கம் தினமலர் செய்தி எதிரொலி
ADDED : செப் 03, 2025 05:50 AM

போடி: போடி அருகே சாலிமரத்துப்பட்டி - பண்ணைத்தோப்பிற்கு ரூ.1.52 கோடி செலவில் பாலம், ரோடு அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.
போடி ஒன்றியம், டொம்புச்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சாலிமரத்துப்பட்டி. 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக் கிராமத்திற்கு செல்லும் ரோட்டின் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. டூவீலரில் கூட செல்ல முடியாத அளவிற்கு பள்ளங்களில் சிறுகுளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் போடி, தேனியில் இருந்து சாலிமரத்துப்பட்டிக்கு வரும் பஸ்கள் நிறுத்தப்பட்டது.
இங்கு ஆரம்ப கல்வி முடித்து நடுநிலைப்பள்ளிக்கும், கல்லூரி செல்லும் மாணவர்கள் அருகே உள்ள போடி, தேனிக்கு செல்ல வேண்டும். பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ., தூரம் நடந்து அருகே உள்ள பத்திரகாளிபுரம் அல்லது போடி - தேனி ரோட்டில் உள்ள தீர்த்த தொட்டி பஸ் ஸ்டாப்பிற்கு சென்று பஸ்சில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்களும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.
சேதம் அடைந்த ரோட்டை சீரமைத்து பஸ் வசதி செய்து தர வேண்டும் என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இச் செய்தியின் எதிரொலியால் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1.52 கோடி செலவில் பாலம், 2 கி.மீ., தூரம் தார் ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.