ADDED : ஜூன் 18, 2025 04:35 AM
தேனி: தேனியில் பா.ஜ., சார்பில் சந்தை மாரியம்மன் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயிலில் வேல்பூஜை நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், நகரதலைவர் ரவிக்குமார், முன்னாள் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சந்தை மாரியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக செல்ல கட்சியினர் முயன்றனர். போலீசார் அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் காரில் சென்று வழிபட்டனர்.
பின்னர் தேனியில் தனியார் மஹாலில் மோடி அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் நடத்தினர்.
இந்த பூஜிக்கப்பட்ட வேல், மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எடுத்து செல்ல உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.