ADDED : மே 31, 2025 12:48 AM

தேனி: ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிக்கு காரணமான பிரதமர் மோடி, முப்படை வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் வடபுதுப்பட்டி, அன்னஞ்சி பா.ஜ., கிளை சார்பில் ஊர்வலம் நடந்தது.
வடபுதுப்பட்டி பிள்ளையார் கோயில் அருகே துவங்கிய ஊர்வலத்தை மாவட்டத் துணைத் தலைவர் செல்வராணி துவங்கி வைத்தார். ஒன்றிய பொறுப்பாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கிளை நிர்வாகிகள் மகேந்திரன், சரவணன், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.