ADDED : ஜூன் 27, 2025 05:24 AM
தேனி:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தி.மு.க., எம்.பி., ராஜா அவதுாறாக பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி எஸ்.பி.,யிடம் மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். இதில் நிர்வாகிகள் மலைச்சாமி, பெரியசாமி உடனிருந்தனர்.
பா.ஜ., நிர்வாகிகள் வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன்களிலும் நேற்று எம்.பி., ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்திருந்தனர்.