/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனீ வளர்ப்பால் 40 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும் உலக தேனீக்கள் தின கருத்தரங்கில் தகவல் தேனீ வளர்ப்பால் 40 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும் உலக தேனீக்கள் தின கருத்தரங்கில் தகவல்
தேனீ வளர்ப்பால் 40 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும் உலக தேனீக்கள் தின கருத்தரங்கில் தகவல்
தேனீ வளர்ப்பால் 40 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும் உலக தேனீக்கள் தின கருத்தரங்கில் தகவல்
தேனீ வளர்ப்பால் 40 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும் உலக தேனீக்கள் தின கருத்தரங்கில் தகவல்
ADDED : மே 22, 2025 04:41 AM
சின்னமனூர்: தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு 30 முதல் 40 சதவீத கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாக உலக தேனீக்கள் தின விழாவில் தொழில் நுட்ப வல்லுநர் சபரிநாதன் பேசினார்.
காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் மே 20ம் ல் உலக தேனீக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
வேளாண் தொழில் நுட்ப வல்லுநர் அருண்ராஜ் தலைமை வகித்தார். தொழில் நுட்ப வல்லுநர் சபரிநாதன் பேசுகையில், தேனீக்கள் வளர்ப்பு மனிதனுக்கு பொருளாதார ரீதியாகவும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. வேளாண் பணிகள் இல்லாத காலங்களில் தேனீ வளர்ப்பு கை கொடுக்கும். ஒரு பெட்டியில் 10 கிலோ தேன் எடுக்கலாம். கதர் கிராமத் தொழில் ஆணையம் தேன் புரட்சி திட்டம் என்ற பெயரில் தேனீ வளர்ப்பு தொழிலை ஊக்கப்படுத்துகிறது.
கிராமங்களில் - தேனீ வளர்ப்பதால் பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு மகசூல் 30 முதல் 40 சதவீதம் வரை அதிகம் கிடைக்கிறது.
இடுக்கி மாவட்டத்தில் ஏலத் தோட்டங்களில் தேனீ வளர்ப்பை ஏல விவசாயிகள் பின்பற்றுகின்றனர். எனவே வருவாய், உடல் ஆரோக்கியம், குறைந்த உடல் உழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தேனீ வளர்ப்பு பயனுள்ளதாக உள்ளது, என்றார்.