/உள்ளூர் செய்திகள்/தேனி/ கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை
ADDED : செப் 11, 2025 07:09 AM

பெரியகுளம் : கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. வனத்துறைக்கு உட்பட்டது. கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரை நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. நேற்று முன்தினம் செப்.9ல் கும்பக்கரை அருவியில் சீராக நீர் வரத்து வந்தது. சுற்றுலாப் பயணிகள் குளித்து விட்டுச் சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் மலைப் பகுதியான வட்டக்கானல், வெள்ளகெவி பகுதியில் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று முதல் தண்ணீர் வரத்து சீராகும் வரை கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி இல்லை என, ரேஞ்சர் அன்பழகன் தெரிவித்தார்.
--