ADDED : மே 22, 2025 04:39 AM
கூடலுார்: காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம்.
இவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் கூடலுார் காக்கானோடை பாலம் அருகே உள்ளது. இவர் தோட்டத்திற்கு சென்ற போது, 3 பேர் வாழைத்தார்களை வெட்டி டூவீலரில் கொண்டு சென்றனர்.
தெற்கு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து முருகன் 54, என்பவரை கைது செய்து 14 வாழைத்தார்களை பறிமுதல் செய்தனர். தப்பிய ஓடிய தினேஷ்குமார், வல்லரசு ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.