/உள்ளூர் செய்திகள்/தேனி/கூடுதல் கழிப்பறை இன்றி திறந்த வெளியை பயன்படுத்தும் அவலம் வீரபாண்டி பேரூராட்சி 15வது வார்டு பொது மக்கள்குமுறல்கூடுதல் கழிப்பறை இன்றி திறந்த வெளியை பயன்படுத்தும் அவலம் வீரபாண்டி பேரூராட்சி 15வது வார்டு பொது மக்கள்குமுறல்
கூடுதல் கழிப்பறை இன்றி திறந்த வெளியை பயன்படுத்தும் அவலம் வீரபாண்டி பேரூராட்சி 15வது வார்டு பொது மக்கள்குமுறல்

கூடுதல் மகளிர் கழிப்பறைகள் அவசியம்
படித்துறை ரோட்டில் மகளிர் கழிப்பறை உள்ளது. தெருவின் முகப்பில் உள்ள மின்மோட்டாருடன் உள்ள சிறிய தொட்டி மூலம், கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது சேதமடைந்த தொட்டி சீரமைக்கும் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. தற்போதுள்ள கழிப்பிடம் பற்றாக்குறையாக உள்ளதால் படித்துறை அருகே உள்ள இடத்திலோ அல்லது மகளிர் கழிப்பறைக்கு அருகே உள்ள காலி இடத்திலாவது பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் கழிப்பறை கட்டித்தர வேண்டும். 2வது குறுக்குத்தெரு உள்ளிட்ட சில குறுக்குத் தெருக்களில் பேவர்பிளாக் கற்கள் அமைக்கப்பட்டது.
விபத்து அபாயம்
ஊர்க்காவல் மெயின் தெருவில் ஒரு வீட்டின் சுவரோடு சுவராக மின்கம்பம் அமைந்துள்ளது. இதுகுறித்து அவ்வீட்டின் உரிமையாளர்கள் மின்சாரத்துறை, பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்ற வில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது.