/உள்ளூர் செய்திகள்/தேனி/ தரமில்லாத நகைகளை வங்கியில் அடகு வைக்க கூறியவரை கொல்ல முயற்சி: மூன்று பேர் கைது கார், உரிமம் இல்லாத துப்பாக்கி, கத்தி பறிமுதல் தரமில்லாத நகைகளை வங்கியில் அடகு வைக்க கூறியவரை கொல்ல முயற்சி: மூன்று பேர் கைது கார், உரிமம் இல்லாத துப்பாக்கி, கத்தி பறிமுதல்
தரமில்லாத நகைகளை வங்கியில் அடகு வைக்க கூறியவரை கொல்ல முயற்சி: மூன்று பேர் கைது கார், உரிமம் இல்லாத துப்பாக்கி, கத்தி பறிமுதல்
தரமில்லாத நகைகளை வங்கியில் அடகு வைக்க கூறியவரை கொல்ல முயற்சி: மூன்று பேர் கைது கார், உரிமம் இல்லாத துப்பாக்கி, கத்தி பறிமுதல்
தரமில்லாத நகைகளை வங்கியில் அடகு வைக்க கூறியவரை கொல்ல முயற்சி: மூன்று பேர் கைது கார், உரிமம் இல்லாத துப்பாக்கி, கத்தி பறிமுதல்
ADDED : செப் 03, 2025 01:01 AM

தேனி:தேனி மாவட்டத்தில் தரம் குறைந்த நகைகளை வங்கியில் அடகு வைக்க கூறிய நண்பரை கடத்தி கொல்ல முயன்றதாக போடி போடேந்திரபுரம் அழகுராஜா 42, அவரது நண்பர்கள் மதுரை அண்ணாநகர் முத்துக்கருப்பன் 41, அனுப்பானடி துரைச்சாமி 42, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கார், உரிமம் இல்லாத துப்பாக்கி, கத்தி பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை மாவட்டம் பேரையூர் கருப்பசாமி. இவரும் தேனி மாவட்டம் போடேந்திரபுரம் காளியம்மன் கோயில் தெரு அழகுராஜாவும் நண்பர்கள். அழகுராஜாவிற்கு வழங்க வேண்டிய பணத்திற்காக தங்கநகையை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள் என கூறி நகைகளை கருப்பசாமி வழங்கினார். அதனை அழகுராஜா போடி தனியார் அடகு நிறுவனத்தில் வைத்து பணம் பெற்றார்.
அடகு நிறுவனத்தில் இருந்து நகையின் தரம் குறைந்துள்ளது என அழகுராஜாவை அழைத்து உறுதி செய்தனர். இதையடுத்து கருப்பசாமி தன்னை ஏமாற்றியது அழகுராஜாவிற்கு தெரிந்தது.
தனக்கு தர வேண்டிய ரூ.1.50 லட்சத்தை தராத கருப்புசாமியை கடத்தி மிரட்டி பணம் பறிக்கலாம் என கருதி அழகுராஜா நண்பர்கள் மதுரை அண்ணாநகர் எஸ்.எம்.பி., காலனி முத்துக்கருப்பன், அனுப்பானடி தெய்வக்கனி தெரு துரைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.
மூவரும் ஒரு காரில் 2 கத்திகள், ஏர் கன் துப்பாக்கியுடன் மதுரை சென்றனர். நேற்று முன்தினம் இரவு தேனி போடேந்திரபுரம் விலக்கு பேக்கரி அருகே போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறப்பு எஸ்.ஐ., முருகன், எஸ்.ஐ., இளங்கோவன் மற்றும் போலீசார் அவர்களை விசாரித்தனர். அவர்களது காரில் இருந்து 2 கத்திகள், உரிமம் இல்லாத துப்பாக்கி இருந்தது. கருப்பசாமியை கடத்தி கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிந்தது. அழகுராஜா உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.