உதவியாளர் பணியிடம் நிரப்ப ஏற்பாடு
உதவியாளர் பணியிடம் நிரப்ப ஏற்பாடு
உதவியாளர் பணியிடம் நிரப்ப ஏற்பாடு
ADDED : ஜூலை 05, 2025 12:19 AM
தேனி; ஆண்டிபட்டி, உத்தமபாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் மட்டும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
மற்ற பேரூராட்சிகளில் இப்பணியிடங்கள் இல்லை. இதனால் இளநிலை உதவியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கோப்புகளை எடுத்து சென்று மற்ற அலுவலகங்களில் வழங்குகின்றனர்.
இந்நிலையில் அனைத்து பேரூராட்சி களிலும் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விரைவில் பேரூராட்சிகளில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.