/உள்ளூர் செய்திகள்/தேனி/ இணையதளம் மூலம் கனிம நடை சீட்டு வழங்க ஏற்பாடு இணையதளம் மூலம் கனிம நடை சீட்டு வழங்க ஏற்பாடு
இணையதளம் மூலம் கனிம நடை சீட்டு வழங்க ஏற்பாடு
இணையதளம் மூலம் கனிம நடை சீட்டு வழங்க ஏற்பாடு
இணையதளம் மூலம் கனிம நடை சீட்டு வழங்க ஏற்பாடு
ADDED : ஜூன் 16, 2025 12:30 AM
தேனி: மாவட்டத்தில் இயங்கி வரும் கிரஷர்களில் இருந்து ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் போன்ற கனிமங்களை வாகனங்களில் எடுத்து செல்ல ஜூன் 12 முதல் இணையதளம் மூலம் மட்டும் நடைசீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
கனிம இருப்பு கிடங்கு அனுமதி பெற்ற உரிமையாளர்கள் சுங்கத்துறை இணையதளம் http://www.mimas.tn.gov.in ல் விண்ணப்பிக்க வேண்டும். பரிசீலிக்கப்பட்டு நடைசீட்டு இணையதளம் மூலம் வழங்கப்படும். நேரடியாக வழங்கப்படாது. கனிம இருப்பு கிடங்கு அமைக்க அனுமதி பெற்ற கிரஷர் உரிமையாளர்கள் இணையம் மூலம் மட்டும் விண்ணப்பித்து நடைசீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.