/உள்ளூர் செய்திகள்/தேனி/ முகாமிற்கு தாமதமாக வந்த வி.ஏ.ஓ.,விடம் வாக்குவாதம் முகாமிற்கு தாமதமாக வந்த வி.ஏ.ஓ.,விடம் வாக்குவாதம்
முகாமிற்கு தாமதமாக வந்த வி.ஏ.ஓ.,விடம் வாக்குவாதம்
முகாமிற்கு தாமதமாக வந்த வி.ஏ.ஓ.,விடம் வாக்குவாதம்
முகாமிற்கு தாமதமாக வந்த வி.ஏ.ஓ.,விடம் வாக்குவாதம்
ADDED : செப் 19, 2025 02:32 AM
பெரியகுளம்: வடுகபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு 4 மணி நேரம் தாமதமாக வந்த தாமரைக்குளம் வி.ஏ.ஓ., தங்கமுத்துவிற்கும், பேரூராட்சி தலைவர் நடேசன் (தி.மு.க.,)க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் இரண்டாவது முகாம் நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது. அனைத்துதுறை அலுவலர்களும் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்தனர். மேல்மங்கலம் வி.ஏ.ஓ.,ராஜவேலிடம் 8,9,10 வார்டு பொதுமக்கள் பட்டா உட்பட கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்தனர்.
11முதல் 15 வார்டுகளுக்கு உட்பட்ட தாமரைக்குளம் வி.ஏ.ஓ., தங்கமுத்து முகாமில் இல்லை. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
வி.ஏ.ஓ., வராததால் பலரும் பதிவேற்றம் செய்யாமல் திரும்பினர். மதியம் 1:00 மணிக்கு வந்த வி.ஏ.ஓ.,தங்கமுத்துவிடம், பேரூராட்சி தலைவர் நடேசன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சலசலப்பு ஏற்பட்டது. பேரூராட்சி தலைவர் கூறுகையில், 'வி.ஏ.ஓ., தங்கமுத்து தாமதத்தால் ஏராளமானவர்கள் பதிவு செய்யாமல் திரும்பினர். அவரது அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு பதிவு செய்திட வேண்டும்.
இது குறித்து கலெக்டர், சப்-கலெக்டருக்கு புகார் தெரிவித்துள்ளேன்,' என்றார். வி.ஏ.ஓ., தங்கமுத்து கூறுகையில், ' முகாமில் எனக்கு பணி ஒதுக்கவில்லை,' என்றார்.