/உள்ளூர் செய்திகள்/தேனி/தொழில் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்தொழில் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
தொழில் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
தொழில் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
தொழில் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 24, 2024 02:06 AM
தேனி : மாநில அரசால் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 முடித்தவர்கள் முதல் பட்டபடிப்பு, தொழிற்கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் 21 முதல் 45 வயது வரையிலும், மற்றவர்கள் 21 முதல் 55 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவராக இருக்க வேண்டும். உற்பத்தி, சேவை சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடனுதவி பரிந்துரை செய்யப்படும். தொழில் முனைவோருக்கு அதிகபட்சம் ரூ.75 லட்சம் மானியம் வழங்கப்படும்.மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு 10 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்துவோருக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். முதல் தலைமுறை தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/needsஎன்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் அல்லது 89255 34002 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர்தெரிவித்துள்ளார்.