Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

 ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

 ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

 ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : டிச 02, 2025 05:37 AM


Google News
தேனி: ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 45 ஆண்கள், ஒரு பெண் காலிப் பணியிடங்களுக்கு நல்ல உடல் தகுதி உள்ள 2025நவ.30ல் 20 வயது பூர்த்தி அடைந்து 50 வயதிற்கு உட்பட்ட 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தோல்வி அடைந்த, சமூக சேவையில் ஆர்வம் உள்ள இருபாலர் விண்ணப்பிக்கலாம்.

மேலும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தோல்வி அடைந்த சமூக சேவையில் ஆர்வம் உள்ள மூன்றாம் பாலினத்தவரிடம் இருந்தும்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விரும்புவோர் தேனி மாவட்ட எஸ்.பி.,அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஐ.டி.ஐ., வளாக கட்டடத்தில் இயங்கிவரும் ஊர்க்காவல் படை அலுவலகத்தை நேரில் அணுகி 2025 டிச.2, 3 ல் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிச.6 மாலை 5:00 மணிக்குள் வட்டார தளபதி, மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகம், ஐ.டி.ஐ., வளாக கட்டடம் எஸ்.பி., அலுவலகம் பின்புறம், தேனி மாவட்டம் -- 625 531 என்ற முகவரியில் வழங்க வேண்டும்.

பின் தேர்வு நடத்தி 45 நாட்கள் அடிப்படை பயிற்சிவழங்கப்பட்டு, ஊர்க்காவல்படையில் பணி அமர்த்தப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் 5 நாட்கள் மட்டும் பணி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம்ஊதியம் (படித்தொகை) ரூ.2800 வழங்கப்படும் என எஸ்.பி., சினேகாபிரியா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us