Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் முறையீடு

பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் முறையீடு

பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் முறையீடு

பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் முறையீடு

ADDED : ஜூன் 16, 2025 05:26 AM


Google News
தேனி: போடி எம்.எல்.ஏ.,வும், முன்னாள் முதல்வருமானபன்னீர் செல்வத்தை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த பொறியாளர் மிலானி சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் வாயிலாக முறையிட்டுஉள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

பன்னீர்செல்வம் 2021 சட்டசபை தேர்தலில்இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இந்நிலையில் அதே சின்னத்தை 2024 லோக்சபா தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டார். இது சட்ட விதிகளில் 10 வது அட்டவணைப்படி தவறாகும். இதனால் அவரை, 'எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.' என போடி தொகுதி வாக்காளர் என்ற முறையில் ஜூன் 12ல் சபாநாயகர் அப்பாவுவிடம் 175 பக்க முறையீட்டு கடிதம் வழங்கி உள்ளேன். உதாரணமாக 2018ல் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதே போன்று தான் இந்த முறையீடும் என கூறியுள்ளார்.

மிலானி சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி முன்னாள் எம்.பி.,யுமான ரவீந்திரநாத்தின்,வெற்றி செல்லாதுஎன, அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us