/உள்ளூர் செய்திகள்/தேனி/கால்நடை தீவன தயாரிப்பிற்காக கேரளா செல்லும் ஆண்டிபட்டி மக்காச்சோளம் கால்நடை தீவன தயாரிப்பிற்காக கேரளா செல்லும் ஆண்டிபட்டி மக்காச்சோளம்
கால்நடை தீவன தயாரிப்பிற்காக கேரளா செல்லும் ஆண்டிபட்டி மக்காச்சோளம்
கால்நடை தீவன தயாரிப்பிற்காக கேரளா செல்லும் ஆண்டிபட்டி மக்காச்சோளம்
கால்நடை தீவன தயாரிப்பிற்காக கேரளா செல்லும் ஆண்டிபட்டி மக்காச்சோளம்
ADDED : ஜூன் 24, 2024 02:06 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் விளையும் மக்காச்சோளம் கால்நடை தீவன தயாரிப்புக்கு கேரளா செல்கிறது.
விலை குவிண்டாலுக்கு ரூ.2400 வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் சண்முகசுந்தரபுரம், லட்சுமிபுரம், முத்துக்கிருஷ்ணாபுரம், ரங்கசமுத்திரம், மறவபட்டி உட்பட பல கிராமங்களில் மக்காச்சோளம் சாகுபடி உள்ளது. மூன்று மாதத்திற்கு முன் விதைப்பு செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மக்காச்சோளத்திற்கான விலை கூடுதலாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயி தங்கப்பாண்டி கூறியதாவது: மக்காச்சோளம் விதைப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து அறுவடை வரை 3 முறை உரமிட்டும், இருமுறை மருந்து தெளிக்க வேண்டும். உரம், மருந்து செலவு அதிகமாகிறது. கடந்த ஆண்டு குவின்டால் ரூ.1700 வரை விலை இருந்தது. ஆண்டிபட்டி பகுதியில் விளையும் மக்காச்சோளம் வியாபாரிகள் மூலம் கால்நடை தீவன தயாரிப்புக்காக கேரளா செல்வதால் தேவை அதிகம் உள்ளது. இதனால் இந்த ஆண்டு குவின்டால் விலை ரூ.2400 வரை உயர்ந்துள்ளது. ஏக்கருக்கு தற்போது 20 குவின்டால் வரை மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.