/உள்ளூர் செய்திகள்/தேனி/யானைகள் வனத்திற்குள் சென்றதால் சுருளி அருவியில் குளிக்க அனுமதியானைகள் வனத்திற்குள் சென்றதால் சுருளி அருவியில் குளிக்க அனுமதி
யானைகள் வனத்திற்குள் சென்றதால் சுருளி அருவியில் குளிக்க அனுமதி
யானைகள் வனத்திற்குள் சென்றதால் சுருளி அருவியில் குளிக்க அனுமதி
யானைகள் வனத்திற்குள் சென்றதால் சுருளி அருவியில் குளிக்க அனுமதி
ADDED : ஜன 11, 2024 04:01 AM
கம்பம் : சுருளி அருவி அருகே முகாமிட்டிருந்த யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றதால் நேற்று காலை முதல் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியது.
சுருளி அருவியில் கடந்த 2023 மார்ச் முதல் தண்ணீர் தொடர்ந்து விழுந்து வருகிறது. இடை இடையே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும், யானைகள் நடமாட்டம் தொடர்பாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மேகமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இருந்த போதும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. எனவே பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் காலை அருவியை ஒட்டியுள்ள பகுதியில், கருப்பசாமி கோயில் அருகே யானைகள் கூட்டம் குட்டிகளோடு நின்றிருந்தது. யானைகளின் பிளிறல் சத்தமும் கேட்டது. உடனடியாக அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களை வனத்துறையினர் வெளியேற்றினர். தொடர்ந்து அருவியில் குளிக்க தடை விதித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை யானைகள் கூட்டம்,வெண்ணியாறு பகுதியை நோக்கி நகர்ந்து சென்றதால், நேற்று காலை முதல் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதித்தது.