/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாணவர்களுக்கு வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சி மாணவர்களுக்கு வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சி
மாணவர்களுக்கு வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சி
மாணவர்களுக்கு வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சி
மாணவர்களுக்கு வேளாண் திறன் வளர்ப்பு பயிற்சி
ADDED : அக் 19, 2025 09:44 PM
தேனி: தேனி மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், தர்மாபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வேளாண் அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு வேளாண் பணிகள் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் அந்தோணி அமல்ராஜ் மேற்பார்வையில் தொழிற்கல்வி பயிற்றுனர் நிரஞ்சனா மாணவர்களை காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு தொழில்நுட்ப பயிற்றுனர்கள் மகேஸ்வரன், சபரிநாதன், ரம்யாசிவச்செல்வி, கார்த்திக்பாண்டியன் ஆகியோர் தேனீ, காளான், பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண், தோட்டக்கலை பயிர் சாகுபடி, திராட்சை, வாழை உணவுப் பொருட்கள் தயாரிப்பு, அசோலா வளர்ப்பு குறித்து நேரடி பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


