ADDED : ஜூன் 11, 2025 07:16 AM
தேனி : மாவட்டத்தில் விருதுநகர் வேளாண் தரக்கட்டுபாடு உதவி இயக்குநர் சக்தி கணேசன், வேளாண் அலுவலர் பாக்கியராஜ் ஆகியோர் தனியார் உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் என 51 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் ஒரு தனியார் உர விற்பனை கடையில் இருப்பு பதிவேட்டில் பதிவு செய்த அளவிற்கும், கையிருப்பிற்கும் வித்தியாசம் இருந்தது. இதனால் அந்த கடையில் உர விற்பனைக்கு தடை விதித்தனர்.