/உள்ளூர் செய்திகள்/தேனி/ காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய பாதை பிரச்னைக்கு தீர்வு..: விவசாயிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய பாதை பிரச்னைக்கு தீர்வு..: விவசாயிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு
காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய பாதை பிரச்னைக்கு தீர்வு..: விவசாயிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு
காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய பாதை பிரச்னைக்கு தீர்வு..: விவசாயிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு
காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய பாதை பிரச்னைக்கு தீர்வு..: விவசாயிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு
ADDED : ஜூலை 01, 2025 03:23 AM

தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு செல்லும் 2.4 கி.மீ., பாதை பிரச்னையில் டி.எஸ்.பி., நல்லு தலைமையிலான நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பயிற்சி மையத்திற்கு சென்று வர தீர்வு கிடைத்துள்ளது.
பெரியகுளம் தாலுகா, தேவதானப்பட்டி பைபாஸ் ரோடு அருகே கரட்டுப் பகுதி அடிவாரத்தில் 2.4 கி.மீ., துாரத்தில் தேனி மாவட்ட காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. 4.2 ஏக்கரில் இப்பயிற்சி மையம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை தகுதி பெற்ற இருபால் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் இண்டோர் ஷூட்டிங் ரேஞ்ச், மற்றும் அவுட்டோர் ஷூட்டிங் ரேஞ்ச் என தனித்தனியாக பயிற்சிகள் வழங்கப்படும். ஆனால் தற்போது திறந்த வெளியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மட்டுமே வழங்கப்படுகிறது. இங்குள்ள மலை அடிவாரத்தில் இலக்கு நிர்ணயித்து போலீசார் பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி நடைபெறும் நாட்களில் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், கால்நடை மேய்ப்போர் பயிற்சி மைய பகுதிகளுக்கு வரவேண்டாம் என தண்டோரா ஒலித்தும், மைக், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்து துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்து வருகின்றன.
வழிபாதையில் பிரச்னை:
இந்நிலையில் மெயின் ரோட்டில் இருந்து பயிற்சி மையத்திற்கு செல்லும் 2.4 கீ.மீ., துாரத்தில் தங்களது பட்டா இடத்தை நிரந்தர போக்குவரத்து வழியாக பயன்படுத்த வழங்க முடியாது என, இரு சமூகத்தினர் போராட்டம் செய்தனர்.இதனால் பயிற்சி மையத்திற்கு சென்று வருவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவில் இரு சமூகத்தினர், பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எதிர்காலத்தில் அந்த வழித்தடங்களை இருதரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளவும், அந்த இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் இடம் வழங்கப்படும் என டி.எஸ்.பி., உறுதி அளித்ததால் பட்டா இடத்தை பாதையை போலீசார் பயன்படுத்த சம்மதித்து உடன்படிக்கை எற்பட்டது. இதனால் தற்போது போலீசார் தடை இன்றி பயிற்சி மையத்திற்கு சென்று வர தீர்வு ஏற்பட்டுள்ளது.