/உள்ளூர் செய்திகள்/தேனி/ வேளாண் மின் இணைப்புகளை பிரிக்கும் திட்டத்தில் சுணக்கம் வேளாண் மின் இணைப்புகளை பிரிக்கும் திட்டத்தில் சுணக்கம்
வேளாண் மின் இணைப்புகளை பிரிக்கும் திட்டத்தில் சுணக்கம்
வேளாண் மின் இணைப்புகளை பிரிக்கும் திட்டத்தில் சுணக்கம்
வேளாண் மின் இணைப்புகளை பிரிக்கும் திட்டத்தில் சுணக்கம்
ADDED : ஜூன் 11, 2025 07:35 AM
கம்பம் : வேளாண் மின் இணைப்புகளை தனியாக பிரிக்கும் ஆர்.டி.எஸ்.எஸ். (Rewamped Distribution System) திட்டப் பணிகள் தேனி மாவட்டத்தில் சுணக்கத்தில் உள்ளது.
மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மின்சப்ளையை மேம்படுத்தவும், மின்பாதையில் ஏற்படும் இழப்புகளை குறைக்கவும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் மின்சாரம் விவசாயிகளால் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், சீரான, தடங்கல் இல்லாத மின் சப்ளை செய்யவும், மத்திய அரசு ஆர்.டி.எஸ்.எஸ். திட்டமாகும். தேனி மாவட்டத்தில் உள்ள 19 துணை மின் நிலையங்களில் 23 மின் பாதைகளை ரூ.50 கோடியில் பிரிக்கும் பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
இதில் குடியிருப்பு இணைப்பு மற்றும் வேளாண் இணைப்புகள் ஒன்றாக உள்ள மின்பாதையில் , இவற்றை தனித் தனியாக பிரிப்பது இதன் பணியாகும்.
இதனால் மின் பாதையில் ஏற்படும் இழப்பு குறையும். குடியிருப்புகளுக்கு 24 மணி நேரம் தடங்கலில்லா மின் சப்ளை உறுதி செய்யப்படும். வேளாண் இணைப்புகளுக்கும் குறிப்பிட்ட நேரம், சரியான அழுத்தத்தில் மின் சப்ளை செய்யப்படும்.
ஆனால் ரூ.50 கோடியில் துவங்கிய பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது. பணியில் முன்னேற்றம் இன்றி முடங்கியுள்ளது. எனவே மதுரை மண்டல தலைமை பொறியாளர் இப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.