Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தோட்டக்கலை பயிர்களை மதிப்பு கூட்டுவதால் கூடுதல் வருமானம் பெறலாம் வேளாண் பல்கலை துணைவேந்தர் பேச்சு

தோட்டக்கலை பயிர்களை மதிப்பு கூட்டுவதால் கூடுதல் வருமானம் பெறலாம் வேளாண் பல்கலை துணைவேந்தர் பேச்சு

தோட்டக்கலை பயிர்களை மதிப்பு கூட்டுவதால் கூடுதல் வருமானம் பெறலாம் வேளாண் பல்கலை துணைவேந்தர் பேச்சு

தோட்டக்கலை பயிர்களை மதிப்பு கூட்டுவதால் கூடுதல் வருமானம் பெறலாம் வேளாண் பல்கலை துணைவேந்தர் பேச்சு

ADDED : ஜன 28, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
--பெரியகுளம், ; விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தோட்டக்கலைப் பயிர்களை மதிப்பு கூட்டிய பொருட்களாக மாற்றுவதால் கூடுதல் வருமானம் பெறலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசினார்.

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் மாநில கருத்தரங்கு கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமையில் நடந்தது. இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் சீதாலட்சுமி பேசுகையில்,

'வேளாண், தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை பெருக்க வேளாண் பல்கலை 112 உழவர் உற்பத்தியாளர் இணைப்புடன் கூடிய திட்டத்தினை வகுத்துள்ளனர். இதன் மூலம் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் விவசாயிகளுக்கு கொண்டு செல்ல எளிதாகிறது. உழவர் உற்பத்தி குழுக்கள் மூலம் அதனைச் சார்ந்த சிறு,குறு விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் செல்வதால் உற்பத்தி திறனை இரு மடங்காக்கலாம்.

பயிர்களை சந்தைப்படுத்துதல், அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் மூலம் நிரந்தர விலை நிர்ணயம் செய்து வகைப்படுத்தலாம். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களால் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற வாய்ப்புள்ளது' என்றார்.

வேளாண் வணிக வளர்ச்சி இயக்குனர் சோமசுந்தரம், பல்கலை விவசாயம், கிராமப்புற மைய இயக்குனர் சுரேஷ்குமார், திருச்சி கல்லூரி முதல்வர் பரமகுரு, தொலைதூரக் கல்வி பேராசிரியர் பாலசுப்பிரமணியன், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் செயல் அலுவலர் வசந்தன் பங்கேற்றனர். துணைவேந்தர் கண்காட்சியை துவக்கி வைத்தார். வேளாண் உற்பத்தி குழுக்களுடைய 6 வகை திட்டம் அமல்படுத்தப்பட்டது. கோவை பல்கலை வணிக மேலாண்மை பேராசிரியர் வேலவன் நன்றி கூறினார்.--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us