/உள்ளூர் செய்திகள்/தேனி/ வாய்ப்புகள் தேடி வரும் வகையில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் நடிகர் சண்முகராஜா அறிவுரை வாய்ப்புகள் தேடி வரும் வகையில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் நடிகர் சண்முகராஜா அறிவுரை
வாய்ப்புகள் தேடி வரும் வகையில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் நடிகர் சண்முகராஜா அறிவுரை
வாய்ப்புகள் தேடி வரும் வகையில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் நடிகர் சண்முகராஜா அறிவுரை
வாய்ப்புகள் தேடி வரும் வகையில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் நடிகர் சண்முகராஜா அறிவுரை
ADDED : ஜூலை 01, 2025 03:18 AM

போடி: 'வாய்ப்புகள் உங்களை தேடி வரும் வகையில் மாணவர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்,' என போடி சி.பி.ஏ., கல்லூரியில் நடந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நடிகர் சண்முகராஜா பேசினார்.
அவர் மேலும் பேசுகையில்,' வகுப்பறையில் பேராசிரியர்கள் நடத்தும் பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெறுவதை விட புரிந்து படித்து தேர்வு எழுதும் வகையில் இருக்க வேண்டும்.
மாணவர்கள் பிடித்த துறைகளை மகிழ்ச்சியுடன் தேர்வு செய்து இரவு, பகல் பாராமல் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை உடன் படித்தால் வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம்.
மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை மறந்து தனித்துவமாக, நம்பிக்கையுடன் செயல்பட்டால் மிகப்பெரிய பங்களிப்பு பெறுவதற்கான வாய்ப்பை பெறலாம்,' என்றார்.
இவ் விழாவிற்கு கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் புருஷோத்தமன், நிர்வாகக் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், முதல்வர் சிவக்குமார், பேராசிரியர் ஞானசேகர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் சுமையாபானு, கிருஷ்ணகுமார் வரவேற்றனர்.