/உள்ளூர் செய்திகள்/தேனி/ வைகை ஆறு கரைகளில் எல்லை கற்கள் ஊன்ற முடிவு ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை வைகை ஆறு கரைகளில் எல்லை கற்கள் ஊன்ற முடிவு ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை
வைகை ஆறு கரைகளில் எல்லை கற்கள் ஊன்ற முடிவு ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை
வைகை ஆறு கரைகளில் எல்லை கற்கள் ஊன்ற முடிவு ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை
வைகை ஆறு கரைகளில் எல்லை கற்கள் ஊன்ற முடிவு ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை
ADDED : செப் 20, 2025 09:18 PM
தேனி:கரையோர ஆக்கிரமிப்புகளை தடுக்க தேனி மூலவைகை துவங்கும் பகுதியில் இருந்து ராமநாதபுரம் கடலில் கலக்கும் இடம் வரை வைகை ஆற்றின் இருபுறமும் எல்லை கற்கள் ஊன்ற நீர்வளத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வைகை ஆறு முக்கிய நதிகளில் ஒன்றாகும். இதுதேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகி மூலவைகையாக வருஷநாடு பகுதியில் இருந்து அம்மச்சியாபுரம் வரை வருகிறது. அங்கு முல்லை பெரியாற்றுடன் கலந்து வைகை அணைக்கு செல்கிறது. அணையில் இருந்து சென்று தேனி , மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வேளாண் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 7 ஆயிரம் சதுர கி.மீ.,க்கு மேலான நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வைகை ஆற்றால் பயனடைகின்றன. இதில் ஆக்கிரமிப்புகளை தடுக்க ஆற்றின் இருபுறமும் நீர்வளத்துறை சார்பில் எல்லை கற்கள் ஊன்றும் பணி விரைவில் துவங்க உள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'வைகை ஆற்றில் தற்போதைய அளவுகளை குறிக்கவும், எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்க எல்லைக்கற்கள் ஊன்றப்பட உள்ளன. இப்பணி 250 கி.மீ., துாரத்திற்கு மேற்கொள்ளப்பட உள்ளது. ஆங்காங்கே ஆற்றின் அகலத்தை அளவீடு செய்து இரு புறமும் எல்லை கற்கள் அமைக்கப்பட உள்ளது. மஞ்சளாறு உபகோட்டம், பெரியாறு வைகை உபகோட்டம், பரமக்குடி கீழ் வைகை உபகோட்டம் உள்ளிட்ட நீர்வளத்துறையினர் இதில் ஈடுபட உள்ளனர்.
இதில் தேனி மாவட்டம் மூலவைகை வருஷநாடு முதல் அம்மச்சியாபுரம் வரை 40 கி.மீ.துாரம் பணி மேற்கொள்ள ரூ.48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைகை ஆறு ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கும் பகுதிவரை இப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.