/உள்ளூர் செய்திகள்/தேனி/ 'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை தேவை 'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை தேவை
'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை தேவை
'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை தேவை
'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை தேவை
UPDATED : ஜூன் 09, 2025 06:08 AM
ADDED : ஜூன் 09, 2025 02:47 AM

கம்பம்: ''ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் பணியை, 'ஜல்ஜீவன்
' திட்டத்தின் கீழ் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசு 'ஜல்ஜீவன்' திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில் ஊராட்சிதோறும் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு ஊராட்சியின் நிலப்பரப்பு, மக்கள் தொகை, தற்போது விநியோகிக்கும் குடிநீரின் அளவு, ஊராட்சி பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தலா ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.
இந்த நிதியை பயன்படுத்தி ஊராட்சிகளில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல், பிரதான பகிர்மான குழாய் பதித்தல், ஆறுகளில் உறைகிணறுகள் அமைத்தல், அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்குதல் போன்ற பணிகள் செய்து வருகின்றனர். பல ஊராட்சிகளில் பணிகள் முடிந்து குடிநீர் 'சப்ளை' துவங்கி உள்ளன. ஆனால், ஏற்கெனவே 'பம்பிங்' செய்த நீரை வினியோகித்தது போல், சுத்திகரிக்கப்படாமல் தற்போதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காகத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் குடிநீர் பகுப்பாய்வு மையம் அமைக்க ஒதுக்கிய நிதியையும் வேறு பயன்பாட்டிற்கு பொதுத் சுகாதாரத்துறை பயன்படுத்தி விட்டது.
ஆக, மத்திய மாநில அரசுகள் செய்த நிதி ஒதுக்கீடுகளை பயன்படுத்தி ஊராட்சி பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த திட்டத்தினால் எந்த பலனும் ஏற்படவில்லை. மேலும் பெரும்பாலான ஊராட்சிகளில் 'ஜல் ஜீவன்' பணிகள் முழுமை பெறாத நிலையிலேயே உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்போதாவது ஊராட்சியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து குடிநீரை சுத்திகரித்து வழங்க உத்தரவிட வேண்டும்.